பிரண்டை இலையை அரைத்து இரத்தக் கட்டியின் மேல் பத்து போட்டு வந்தாள் இரத்தக்கட்டி கரையும், பிரண்டை துவையல் தின்றால் பித்தம் தெளியும்.
வியாழன், 12 மார்ச், 2020
கருமையான தலைமுடியை பெற என்ன செய்ய வேண்டும்...?
காய்ந்த நெல்லிக்காயை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த எண்ணையை தேய்த்துவந்தால் முடி கருமையாகும்.
வயிற்றுக்கோளாறு நீங்க என்ன செய்ய வேண்டும்...?
வில்வ இலைக் கொழுந்து ஐந்து தின்றால் வயிற்றுக் கோளாறு நீங்கும் இரத்தம் சுத்தமாகும்.
தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை கட்டு குணமடைய என்ன செய்ய வேண்டும்...?
மா இலை மற்றும் பச்சை இலை இரண்டையும் நெருப்பிலிட்டு வரும் புகையை வாய்வழியாக சுவாசிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
வெள்ளி, 6 மார்ச், 2020
தண்ணீரை தூய்மையாக்கும் துளசி இலை...!
குடிக்கும் தண்ணீரில் துளசி இலையை போட்டால் குடிதண்ணீர் சுத்தமாகும் அதிலுள்ள நோய்க்கிருமிகள் அழிந்துவிடும்.
செவ்வாய், 3 மார்ச், 2020
தீராத சளி நீங்கிட என்ன செய்ய வேண்டும்...?
ஆடா தோடா இலை, மிளகு, மஞ்சள் அல்லது தேன் கலந்து கசாயம் தயார் செய்து அருந்தி வந்தால் சளி நீங்கிவிடும்.
திங்கள், 2 மார்ச், 2020
மூட்டு வாதம் ,மூட்டு வலி குணமடைய என்ன செய்ய வேண்டும்...?
மூட்டு வாதம் உடல் வலி மற்றும் மூட்டு வலி குணமாக முடக்கத்தான் இலையை உண்ண வேண்டும். முடக்கத்தான் இலையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டு சாப்பிடலாம்.
தீராத சளி குணமடைய என்ன செய்ய வேண்டும்...?
சிறிதளவு வெற்றிலை, துளசி மற்றும் மிளகு ஆகிய மூன்றையும் கலந்து நன்றாக அரைத்து சாப்பிட்டால் தீராத சளி குணமடையும்.
சனி, 29 பிப்ரவரி, 2020
அழுக்குத் தேமல் நீங்கிட என்ன செய்ய வேண்டும்..?
சிறிதளவு துளசி இலையை எடுத்து எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து நன்கு அரைத்து பற்றுபோட்டால் பூச்சிகளால் ஏற்படும் அழுக்கு தேமல் குணமடையும்.
வியாழன், 27 பிப்ரவரி, 2020
நாவரட்சி போக்கிட என்ன செய்ய வேண்டும்..?
ஓரிரு துளசி இலைகளை நன்கு மென்று தின்றால் நாவறட்சி நீங்கும்.
சூதக வலியை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..?
வேப்பிலை, சுக்கு, மற்றும் சீரகம் இவை மூன்றையும் ஒரு லிட்டர் நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், அந்த நீர் நன்றாக கொதித்து கால் லிட்டராக சுண்டியபின் அதை தினமும் 3 வேளை பருக வேண்டும். இவ்வாறு செய்தால் சூதக வலி குறையும்.
பல் கூச்சம் சரியாக என்ன செய்ய வேண்டும்..?
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் காலையில் பல் துலக்கும் போது ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை நன்றாக மென்று குதப்பினாள் பல்கூச்சம் நீங்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)