சனி, 29 பிப்ரவரி, 2020

அழுக்குத் தேமல் நீங்கிட என்ன செய்ய வேண்டும்..?

சிறிதளவு துளசி இலையை எடுத்து எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து நன்கு அரைத்து பற்றுபோட்டால் பூச்சிகளால் ஏற்படும் அழுக்கு தேமல் குணமடையும்.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

நாவரட்சி போக்கிட என்ன செய்ய வேண்டும்..?

ஓரிரு துளசி இலைகளை நன்கு மென்று தின்றால் நாவறட்சி நீங்கும்.

சூதக வலியை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..?

வேப்பிலை, சுக்கு, மற்றும் சீரகம் இவை மூன்றையும் ஒரு லிட்டர் நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், அந்த நீர் நன்றாக கொதித்து கால் லிட்டராக சுண்டியபின் அதை தினமும் 3 வேளை பருக வேண்டும். இவ்வாறு செய்தால் சூதக வலி குறையும்.

பல் கூச்சம் சரியாக என்ன செய்ய வேண்டும்..?

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் காலையில் பல் துலக்கும் போது ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை நன்றாக மென்று குதப்பினாள் பல்கூச்சம் நீங்கும்